Marutthuvanathar Charitable Trust

அகத்தியர்

அகத்தியர்  என்பவர் தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார்.

திருமூலர்

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 5000 வருடங்களுக்கு முந்தயது எனினும் இவரால் அருளப்பட்ட திருமந்திரமாலை பல காலத்திற்கு பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் பொ.ஊ. என்று கூறுகின்றனர். இது 3000 பாடல்களைக் கொண்டது.

இடைக்காடர்

இடைக்காடர் திருவள்ளுவ மாலையின் 54-ஆவது பாடலை இயற்றியுள்ளார். இவர் சங்ககாலப் புலவர் இடைக்காடனார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர்.மதுரைக்கு அருகிலுள்ள இடைக்காடு என்ற ஊாிலிருந்து வந்த சித்தர் இடைக்காடர். இடைக்கலி நாட்டைச் சேர்ந்தவர்.சிறந்த உதாரணங்களோடு பாடல் பாடுவதில் வல்லவர். சோழ மன்னன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றி (புறநானுாறு பாடல்) போற்றிப் பாடியுள்ளார். “ஊசிமுறி” என்ற இலக்கண நுாலையும் பாடியுள்ளார்.

கோரக்கர்

கோரக்கர் என்பார் தமிழக சித்தர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் சித்தர்களான அகத்தியர் மற்றும் போகர் ஆகியோரின் மாணவராக இருந்தார். போகரின் பல்வேறு படைப்புகளில் கோரக்கர் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. இவர் தமது இளம் வயதினை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இவரது பிறப்பிடம் எனினும் வடநாட்டில் திருத்தலமான புருடன்குடி எனப்படும் இன்று பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்து உள்ளது.

கொங்கணர்

கொங்கண சித்தர் அல்லது கொங்கணர் அல்லது கொங்கணவர் பதினெண் சித்தர்களுள் முக்கியமான சித்தராகக் கருதப்படுபவர். எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண் பிரதேசத்தில் புளிஞர் குடியில் கொங்கணச் சித்தர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த முருகன் மற்றும் அம்பிகை பக்தர் ஆவார். முருகனை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

காலங்கி நாதர்

நெடிய உருவம் கொண்ட இவர் வாசி யோகம் புரியும் கலையில் வல்லவர். நடை பயணமாகவே பல மலைகளை அடைந்து அற்புதமான மருத்துவ மூலிகைகளை கொண்டு வருபவர். இவர் செல்லும் இடங்களில் சில காலம் தங்கி பக்குவபட்ட ஆன்மாக்களுகு வாசிப் பயிற்சி அளிப்பவர். பயண இடைவெளிகளில் சிவாலயங்களில் தங்கி அந்த ஊரின் வளங்கள், அமைதியின் பொருட்டு சில காலம் யோகம் செய்து செல்வார். 

போகர்

போகர், போக மாமுனிவர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவர் வைகாவூர் (பழனி) எனும் ஊரில் பிறந்தார். இவர் தனது தாய் மற்றும் தனது தாத்தாவிடமும் கல்வியைக் கற்றார் என்று கூறப்படுகிறது. இவர் நவசித்தர்களுள் ஒருவரான காலங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார்.

புலிப்பாணி

சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தவர். அணுக்கூறுகளின் தத்துவங்களை முற்றும் உணர்ந்தவர். அதன் ஐந்து வகை ஆற்றல்களையும், செயல்படும் முறைகளையும் தெளிவாக உணர்ந்தவர். இறை ஒளி இரகசியங்களை ஞானத்தால் கண்டுத்தெளிந்தவர். இவரை அடிபணிந்து வணங்குவதன் மூலம் மனம் சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளும், மன நோய்கள் நீங்கவும், தன்னம்பிக்கைக் கூடி ஆற்றலுடன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.

கருவூரார்

என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், 

மச்சமுனி

மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது. இவரின் குருபூஜை (பிறந்த திருநாள்) புரட்டாதி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று, அதாவது பிள்ளையார் சதுர்த்திக்கு மறுநாள் ஆகும்.

கமலமுனி

கமலமுனி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். இவர் குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். இவர் போகரிடம் சீடனாய்ச் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றவர். இவர் திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர் .கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.

சட்டைமுனி

சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார்  என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.

பிரம்மமுனி

பிரம்மமுனி 18 சித்தர்களில் ஒருவர். இவரது பெற்றோர் மீன் வியாபாரம் செய்துவந்தனர். இவருக்கு பிரம்மனைப் போல படைப்புத்தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக யாகம் செய்தார்.  அந்த யாக குண்டத்திலிருந்து தோன்றிய இரண்டு பெண்கள் தங்களை திருமணம் செய்துகொள்ளும்படி முனிவரை வற்புறுத்தினர். 

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.

குதம்பைச்சித்தர்

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம்.

தேரையர்

தலையைப் பிளந்து அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். 

சிவவாக்கியர்

பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. 

பதஞ்சலி

பதஞ்சலி என்பவர் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு, அனைத்து முனிகளும் ரிஷிகளும் விஷ்ணுவை அணுகினர், அவர் (தன்வந்திரியாக அவதரித்தவர்) ஆயுர்வேதத்தின் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் வழிகளைக் கொடுத்தாலும், மக்கள் இன்னும் நோய்வாய்ப்படுகிறார்கள் என்று சொல்ல.